Page Loader
வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
நியூஸிலாந்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

எழுதியவர் Sindhuja SM
Feb 15, 2023
02:14 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று(பிப் 15) 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதற்கட்ட தரவுகளின்படி, நிலநடுக்கம் 57.4 கிமீ என்ற மிதமான ஆழத்தில் அமைந்திருந்தது. 76 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இரவு 7.38 மணியளவில் பதிவாகியுள்ளது. இது பராபரமுவிற்கு வடமேற்கில் 50 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. 15 நிமிடங்களுக்குள், 31000க்கும் மேற்பட்ட மக்கள் பூகம்பத்தை உணர்ந்ததாக ஜியோநெட்டில் தெரிவித்துள்ளனர். கேபிரியல்லா என்ற புயல் கடந்த ஞாயிற்று கிழமை(பிப் 12) இதே நியூஸிலாந்தை தாக்கியதால் பெருமளவில் அங்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திங்களன்று நிலச்சரிவும் பதிவானது. ஒரு தீயணைப்பு வீரர் உட்பட நான்கு பேர் இந்த புயலால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தனியார் அறிவியல் அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவல்