
அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்
செய்தி முன்னோட்டம்
ஒரு ஆறு வயது முஸ்லீம் சிறுவன் அவனது வீட்டு உரிமையாளரால் 26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "கொடூரமான வெறுப்பு செயல்" என்று விவரித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்பட்ட கோபத்தை தீர்க்க குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆறு வயது முஸ்லீம் சிறுவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடந்த இந்த வெறுப்பு சம்பவத்தின் போது, அந்த ஆறு வயது முஸ்லீம் சிறுவனும், 32 வயதான அவனது தாயும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
அவனது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர் உயிர் பிழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கஜ்வ்
அமைதி, கல்வி மற்றும் அடைக்கலம் தேடி அமெரிக்காவிற்கு வந்த பாலஸ்தீன குடும்பம்
இந்த விவரங்களை எல்லாம் வில் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட சிறுவன் பாலஸ்தீனிய அமெரிக்க சிறுவன் ஆவான். அவனது பெயர் வடேயா அல்-ஃபாயூம் ஆகும். அவனது தாய் ஹனான் ஷாஹின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பலஸ்தீனர்களான அவர்கள் அமைதி, கல்வி மற்றும் அடைக்கலம் தேடி அமெரிக்காவிற்கு வந்தாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஜோசப் சுபா(71), அந்த சிறுவனை 7 அங்குல(18-செ.மீ) ரேட்டட் பிளேடால் இராணுவ பாணியிலான கத்தியால் குத்தி கொன்றார்.
அந்த ஏழு அங்குல கத்தி பிரேத பரிசோதனையின் போது சிறுவனின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.
அந்த சிறுவனை குத்துவதற்கு முன், ஜோசப் சுபா, "முஸ்லிம்களாகிய நீங்கள் சாக வேண்டும்" என்று கூறி விஷயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.