பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த கோரி, யூதர்கள் மற்றும் பிறர், அமெரிக்காவின் கேபிடல் கில்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், "யூதர்கள் இப்போதே போர் நிறுத்தம் என்கிறார்கள்", "எங்கள் பெயரில் வேண்டாம்" என எழுதப்பட்ட கருப்பு நிற உடைகளையும், யூத மதத்தின் தொப்பியான "கிப்பா" அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. "ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு நாங்கள் போராட்டக்காரர்களை எச்சரித்தோம், அவர்கள் கேட்காததால் நாங்கள் அவர்களை கைது செய்ய தொடங்கினோம்", என்ன அமெரிக்காவின் கேபிடல் கில் போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு "வாய்ஸ் ஃபார் ஜூஸ்", என்ற யூத சியோனிச எதிர்ப்பு அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.