கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
இந்தியாவில் இருந்து தப்பி, கனடாவிற்கு குடிபெயர்ந்த ஹாதீப் சிங் நிஜ்ஜார் என்கிற காலிஸ்தான் தீவிரவாதி, கடந்த ஜூன் மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, கனடா அரசு, தன்னுடைய நாடு பிரஜை ஒருவர் கொல்லப்பட்டதற்கு பின்னால் இந்தியாவின் ஏஜெண்டுகள் சதி உள்ளதென குற்றம் சாட்டி, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியது. இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டின் உறவும் பிளவுபடத்தொடங்க, தற்போது மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதி, சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. சுக்தூல் சிங் என பெயர்கொண்ட அந்த தீவிரவாதி, 2017-இல் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிலிருந்து தப்பி, கனடாவிற்கு சென்றவன் எனக்கூறப்படுகிறது.