Page Loader
ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு 
அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Sep 05, 2023
10:04 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு(72) கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருத்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடைசியாக ஜூலை 2022இல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். "இன்று மாலை, முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, டெலாவேர், ரெஹோபோத் கடற்கரையில் உள்ள அவரது வீட்டில் அவர் ஓய்வெடுப்பார்." என்று வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் எலிசபெத் அலெக்சாண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனினும், அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இதுவரை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு