NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்
    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 20, 2023
    04:32 pm
    7,000 அறியப்படாத தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்
    1987 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட அதிகாரப்பூர்வ தீவுகளின் மொத்த எண்ணிக்கை 6,852 ஆகும்.

    ஜப்பானில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆய்வுக்குப் பிறகு கிட்டத்தட்ட 7,000 அறியப்படாத தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அறிக்கை வெளியாகி உள்ளது. 1987 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட அதிகாரப்பூர்வ தீவுகளின் மொத்த எண்ணிக்கை 6,852 ஆகும். தற்போதுள்ள எண்ணிக்கை அதைவிட இரட்டிப்பாக உள்ளது. அதாவது 14,125 ஆக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு இதைப்பற்றி ஜப்பான் பாராளுமன்றத்தில் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. நிறைய உறுப்பினர்கள் பழைய எண்ணிக்கை தவறாக இருக்கலாம் என்று வாதிட்டனர். "தீவுகளின் எண்ணிக்கையைப் பற்றிய துல்லியமான விவரம் தேசிய நலனுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விஷயமாகும்" என்று ஒரு லிபரல் டெமாக்ராட் சட்டமன்ற உறுப்பினர் அந்த நேரத்தில் கூறினார்.

    2/2

    கணினி மூலம் துல்லியமான விவரங்களை கணிக்க இருக்கும் ஜப்பான்

    இதனையடுத்து, ஜப்பானின் ஜியோஸ்பேஷியல் இன்ஃபர்மேஷன் அத்தாரிட்டி மூலம் புதிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பால் நாட்டின் நிலப்பரப்பு அதிகரித்துவிடாது என்றாலும், எத்தனை தீவுகள் இருக்கிறது என்ற துல்லியம் நாட்டை வழிநடத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும், ஜப்பானிய அரசாங்கம், 2022இல் உருவாக்கிய ஜிஎஸ்ஐ மின்னணு நில வரைபடத்தின் அடிப்படையில் ஒரு கணினியின் உதவியுடன் தங்கள் நிலப்பரப்பின் துல்லியமான புள்ளிவிவரங்களை விரைவில் தயாரிக்கும் என்று செய்திகள் கூறுகின்றன. ஜப்பானின் நிலப்பரப்பு சுமார் 146,000 சதுர மைல்களாகும். இது 124,840,000 மக்கள்தொகை கொண்ட உலகின் பதினொன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஜப்பான்
    உலகம்

    ஜப்பான்

    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள் ஆரோக்கியம்
    ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ வைரல் செய்தி
    ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! சுற்றுலா

    உலகம்

    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    'சோக்லெட்' தொழிலில் வெற்றி பெற்ற தமிழர்கள் - உலகளவில் விற்பனை கோவை
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை ஆஸ்திரேலியா
    இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023