Page Loader
நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 
மெலோனி, ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை மீடியாசெட் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்தித்தார்.

நீண்டகால காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 

எழுதியவர் Srinath r
Oct 20, 2023
04:42 pm

செய்தி முன்னோட்டம்

இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது பத்து வருட காதலரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவை பிரிவதாக இன்று அறிவித்தார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜார்ஜியா, "ஜியாம்ப்ருனோ உடனான என்னுடைய 10 ஆண்டு உறவே இங்கே முடிவடைகிறது". "இந்த அற்புதமான வருடங்களை அவர் எனக்கு அளித்ததற்காகவும், கடுமையான தருணங்களில் உடன் இருந்ததற்காகவும், என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான என் மகள் கினேவ்ராவை எனக்கு வழங்கியதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." "எங்கள் பாதைகள் சில காலமாக வேறுபட்டுவிட்டன, அதை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது." என தெரிவித்தார். ஜார்ஜியா மெலோனி தனது காதலரை பிரிந்ததற்கு அவரின் சமீபத்திய ஆபாச பேச்சுக்கள் காரணமாக சொல்லப்படுகிறது.

2nd card

ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோவின் ஆபாச பேச்சுக்கள்

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ பணியாற்றி வருகிறார். இந்த வாரத்தில் அவர் இரண்டு முறை, தனது சக பெண் பணியாளரிடம் தவறாக பேசும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையானது. மேலும் வெளியான மற்றொரு வீடியோவில் அவர் தன், சக பெண் பணியாளர்களிடம் அவரின் தகாத உறவுகள் குறித்தும் குறித்து பெருமையாகவும், அவர்களை உடலுறவுக்கு அழைக்கும் வண்ணமும் பேசியிருந்தார் இதுவே இத்தாலி பிரதமர் தனது காதலனை பிரிவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெண்கள் மது அருந்துவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஜியாம்ப்ருனோ பதிவு செய்திருந்தார், "பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தவிர்க்க விரும்பினால், அவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்" என்று பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.