ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்த ஆஸ்திரேலிய-இந்தியர்கள், அதை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. "இதற்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் இந்துக்கள். எங்கள் கலாச்சாரத்தில் இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். மேலும், எல்லா மதத்தையும் நாங்கள் மதிக்கிறோம்" என்று சிட்னியில் உள்ள இந்தியர் ஒருவர் ANI இடம் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் வருத்தம்
"ஒவ்வொரு முறையும் இதுபோன்ற செய்திகளைக் கேட்கும்போது, அது என்னை கவலையடையச் செய்கிறது. இந்துவோ கிறிஸ்தவரோ அல்லது முஸ்லீமோ, எந்த மாதமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று தான். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று சிட்னியில் உள்ள மற்றொரு இந்தியர் கூறியுள்ளார். "நாம் பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு என்று அரசாங்கம் கூறுகிறது, அதனால் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் கோவில்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்." என்று சிட்னியில் உள்ள ஒரு இந்தியர் கூறியுள்ளார்.