Page Loader
சிங்கப்பூர் அதிபராக இன்று பதவி ஏற்கிறார் தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர் அதிபராக இன்று பதவி ஏற்கிறார் தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர் அதிபராக இன்று பதவி ஏற்கிறார் தர்மன் சண்முகரத்தினம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2023
08:55 am

செய்தி முன்னோட்டம்

இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார். சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தோற்கடித்து, தர்மன் சண்முகரத்தினம் வெற்றி வாகை சூடியுள்ளார். இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்களான எங் கோக் சாங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் 15.7 சதவீதம் மற்றும் 13.88 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, தர்மன் சண்முகரத்னம் இன்று அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் 9-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

சிங்கப்பூர் அதிபர்