Loading...
கின்னஸ் சாதனைக்குத் தயாராகும் 9 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம்: எலக்ட்ரிக் கிட்டார் தேர்வில் புதிய மைல்கல்
இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம், எலக்ட்ரிக் கிட்டார் இசைக்கான கிரேடு 8 தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார்

கின்னஸ் சாதனைக்குத் தயாராகும் 9 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம்: எலக்ட்ரிக் கிட்டார் தேர்வில் புதிய மைல்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

பிரிட்டனில் வசிக்கும் ஒன்பது வயதான இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம், எலக்ட்ரிக் கிட்டார் இசைக்கான கிரேடு 8 தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார். இத்தேர்வில் ஏட்ரியன் ஆபிரகாம் தேர்ச்சி பெற்றால், எலக்ட்ரிக் கிட்டார் பிரிவில் மிகக் குறைந்த வயதில் இச்சாதனையை படைத்த நபர் என்ற பெருமையைப் பெற்று, அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனையை படைப்பார். இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சாண்டர் ஹார்கிரேவ்ஸ் என்பவர் தனது 11 வயது 7 மாதங்களில் இச்சாதனையை படைத்திருந்ததே தற்போதைய உலக சாதனையாக உள்ளது. எலக்ட்ரிக் கிட்டாரில் கிரேடு 8 தேர்வு என்பது மிகவும் சவாலான உயர்மட்டத் தேர்வாகக் கருதப்படுகிறது. இதற்குக் கூர்மையான இசை நயம், நுட்பமான வாசிக்கும் திறன், சைட்-ரீடிங் மற்றும் கேட்கும் திறன் ஆகியவை அவசியமாகும்.

நிதியுதவி

சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்களின் நிதியுதவி

ஏட்ரியனின் அபாரமான இசை திறமையைக் கண்டு, ராக் இசைத்துறையில் முன்னணி நிறுவனங்களான மார்ஷல் ஆம்ப்ளிஃபையர்ஸ் மற்றும் சோலார் கிட்டார்ஸ் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் அவருக்கு கலைஞர் ஆதரவு நிதியுதவியை வழங்கியுள்ளன.

ராக் மற்றும் மெட்டல் இசை வடிவம் மூலம் தன்னைப் வெளிப்படுத்துவது மிகவும் பிடிக்கும் என அச்சிறுவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய மெட்டல் இசையுடன் சேர்த்து, 'ராக்ஸ்டார்' போன்ற இந்தியத் திரைப்படப் பாடல்களின் இசைவடிவங்களையும் கிட்டார் மூலம் மீட்ட விரும்புவதாக ஏட்ரியன் கூறியுள்ளார்.

பாலிவுட் மற்றும் மேற்கத்திய ராக் இசையின் கலவையை உலகளாவிய ரசிகர்கள் ரசிப்பது அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

கின்னஸ் உலக சாதனை எண்ணமே தன்னை தினமும் தீவிரப் பயிற்சி செய்ய வைப்பதாக ஏட்ரியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT