NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்': இங்கிலாந்து கலவரங்களுக்கு மத்தியில் இந்தியா பயண ஆலோசனையை வெளியிட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    'எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்': இங்கிலாந்து கலவரங்களுக்கு மத்தியில் இந்தியா பயண ஆலோசனையை வெளியிட்டது
    நாடு முழுவதும் பரவி வரும் வன்முறை போராட்டங்கள் pc: AP

    'எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்': இங்கிலாந்து கலவரங்களுக்கு மத்தியில் இந்தியா பயண ஆலோசனையை வெளியிட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 06, 2024
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    லண்டனில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள இந்திய பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.

    நாடு முழுவதும் பரவி வரும் வன்முறை போராட்டங்கள் காரணமாக பயணிகளை "எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்க" அறிவுறுத்துகிறது.

    புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டதாகக் கூறப்படும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இங்கிலாந்தில் ஏற்பட்ட மிகக் கடுமையான கலவரத்திற்கு விடையளிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

    கடந்த வாரம் சவுத்போர்ட் பகுதியில் மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து நகரில் அமைதியின்மை ஏற்பட்டது.

    புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு குழுக்கள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி, சந்தேக நபர் தீவிர இஸ்லாமியவாதி என இணையத்தில் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வன்முறை

    இங்கிலாந்தில் பரவிய வன்முறை மற்றும் அரசின் பதில்

    வன்முறை தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகங்களை குறிவைப்பவர்கள் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    "வெளிப்படையான உந்துதல் எதுவாக இருந்தாலும், இது எதிர்ப்பு அல்ல, இது தூய வன்முறை மற்றும் மசூதிகள் அல்லது எங்கள் முஸ்லிம் சமூகங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று ஸ்டார்மர் கூறினார்.

    அமைதியின்மைக்கு காரணமானவர்களுக்கு எதிராக "விரைவான குற்றவியல் தடைகளை" அவர் உறுதியளித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பயண ஆலோசனை

    #BREAKING: Indian High Commission in London issues advisory for Indian nationals visiting UK. Visitors from India are being asked to stay vigilant and exercise due caution while travelling in the UK. Emergency Helpline number issued. pic.twitter.com/RNpj9Td9J3

    — Aditya Raj Kaul (@AdityaRajKaul) August 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    இந்தியா
    பயணம்
    பயண குறிப்புகள்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    இங்கிலாந்து

    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? விசா
    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர் லண்டன்
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை பிரீமியர் லீக்

    இந்தியா

    கொரோனாவால் அனாதையான பல குழந்தைகளின் PM CARES விண்ணப்பங்கள் நிராகரிப்பு  கொரோனா
    கடைசி தேதிக்குப் பிறகு ITR தாக்கல் செய்பவர்களிடம் எவ்வளவு அபராதம் வசூலிக்கப்படும்? வருமான வரி விதிகள்
    14 மணி நேர வேலை நாட்களை முன்மொழிந்தது கர்நாடக ஐடி நிறுவனங்கள்: ஊழியர்கள் கடும் எதிர்ப்பு  கர்நாடகா
    நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி  கேரளா

    பயணம்

    2 ஆண்டுக்கால இடைவெளிக்கு பின்னர் இமயமலை செல்லவுள்ளார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    ஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் ஐரோப்பா
    முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி
    விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்  விமானம்

    பயண குறிப்புகள்

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் ஆரோக்கியம்
    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை! சுற்றுலா
    கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ் பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025