இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்?
செய்தி முன்னோட்டம்
ஜனாதிபதி திரௌபதி முர்முவின், ஜி20 விருந்துக்கு 'இந்தியாவின் ஜனாதிபதி' என்பதற்குப் பதிலாக 'பாரதத்தின் குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிட்டது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவின் பெயரை மாற்றவிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இப்படி ஒரு நாடு தனது பெயரை மாற்ற நினைத்தால், உலக நாடுகளின் அமைப்பான ஐநா சபை என்ன செய்யும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு நாடு தனது பெயரை மாற்ற விரும்புகிறதோ, அவற்றின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலிக்கிறது என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
card 2
ஐ.நா. சபையில் பெயர் மாற்றம் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது?
சர்வதேச உறவுகளைப் பேணுவதற்கும் இறையாண்மையுள்ள நாடுகளை அங்கீகரிப்பதற்கும் பொறுப்பான உலகளாவிய அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை இருப்பதால், ஒரு நாட்டின் பெயரை மாற்றுவதற்கு சில நெறிமுறைகளை கடைபிடிக்கிறது.
அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசாங்கத்தால், முறையான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பமானது நாட்டின் பெயரை மாற்றுவதற்கான விருப்பத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் மற்றும் அவ்வாறு செய்வதற்கான சரியான காரணங்களை வழங்க வேண்டும்.
card 3
பெயர் மாற்றம் செய்ய என்ன நெறிமுறைகள்?
உள்நாட்டு முடிவு: அதன் பெயரை மாற்ற விரும்பும் நாடு, முதலில் அதன் அரசாங்கம் அல்லது தொடர்புடைய அதிகாரிகள் மூலம் உள்நாட்டு முடிவை எடுக்கிறது. இந்த முடிவு பொதுவாக சட்டமன்ற அல்லது நிர்வாக நடவடிக்கையால் மேற்கொள்ளப்படும்.
ஐ.நா. சபைக்கு ஒப்புதல் கோரிக்கை: உள்நாட்டில் ஒப்புதல் பெற்ற பிறகு, உலக நாடுகளின் கூட்டமைப்பாக செயல்படும், ஐ.நா. சபையின் பொதுச்செயலாளருக்கு தனது பெயரை மாற்றுவதற்கான நோக்கத்தை குறிப்பிட்டு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
ஐ.நா. பொதுச் சபை தீர்மானம்: ஐ.நா.வின் முக்கிய விவாதம் மற்றும் கொள்கை உருவாக்கும் அமைப்பான பொதுச் சபைக்கு, அந்த நாடு முறையான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கையானது, நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியிடமிருந்து ஐ.நா.விற்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும்.
card 4
சட்டக்குழு ஆலோசனையும், வாக்கெடுப்பும்
சட்டக்குழு ஆலோசனை: ஐ.நா. பொதுச் சபை, அந்த நாட்டின் கோரிக்கையை பரிசீலித்து, மேலும் ஆய்வுக்காக ஐ.நா.வில் உள்ள சட்டக் குழு அல்லது தேவைப்பட்டால் மற்ற சிறப்புக் குழுக்களிடம் அனுப்பும். அங்கு நடைபெறும் விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் சட்ட மதிப்பீடுகள் போன்றவற்றிற்கு அந்த நாடு உடன்பட வேண்டும்.
வாக்கெடுப்பு: அனைத்து நிலைகளையும் கடந்த பிறகு, உறுப்பு நாடுகளின் ஆதரவை பொறுத்து, பெயர் மாற்றத்தை அங்கீகரிப்பதில் ஐ.நா. பொதுச் சபை ஒருமித்த கருத்தை எட்டலாம். ஒருமித்த கருத்தை அடைய முடியாவிட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படலாம். முக்கியமான கேள்விகளில் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு பொதுவாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகள் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.
card 5
புதிய பெயர் அறிவிப்பு
அறிவிப்பு: பெயர் மாற்றம் ஐ.நா பொதுச் சபை அல்லது பிற தொடர்புடைய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவுடன், அந்த நாடு அதிகாரப்பூர்வமாக புதிய பெயரை, ஐ.நா பொதுச் செயலாளருக்கு அறிவிக்கிறது. பொதுச்செயலாளர் பின்னர் அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்கும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுக்கும் இந்த பெயர் மாற்றத்தைத் முறையாக தெரிவிப்பார்.
இத்தனை நடைமுறைகளையும் தாண்டி இது வரை, துர்க்கியே, நெதர்லாந்து, ஸ்ரீ லங்கா என 9 உலக நாடுகள் பெயர் மாற்றம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.