NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

    இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ஏமனின் ஹூதிகள் செவ்வாயன்று செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஒரு அமெரிக்க மற்றும் ஒரு பிரிட்டிஷ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஏமன் துறைமுகமான ஹொடைடாவிற்கு மேற்கே செங்கடலின் தெற்குப் பகுதியில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில் இருந்து அதே நாளில் இரண்டாவது கப்பல் மீதுதாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரிட்டிஷ் இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்(UKMTO) தெரிவித்துள்ளது.

    அந்த இரண்டாவது கப்பல் அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கிரேக்க நாட்டை சேர்ந்த கப்பலாகும்.

    செங்கடல் 

    இங்கிலாந்து கப்பல் மீது மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன

    எனினும், இந்த தாக்குதல் கடல்பரப்பில் இருந்து நடத்தப்பட்டதா அல்லது ராக்கெட் மூலம் நடத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    இதற்கிடையில், ஹூதிகள் 'ஸ்டார் நாசியா' மீது மூன்று ஏவுகணைகளை வீசியதாகக் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை, ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அதனால் சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்குச் சொந்தமான 'மார்னிங் டைட்' என்ற சரக்குக் கப்பல் மீது மூன்று ஏவுகணைகள் வீசப்பட்டன.

    ஏமனின் வடமேற்கு சாதா மாகாணத்தில் உருவான ஹூதிகள் என்ற ஆயுதக்குழு, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை

    இந்தியா

    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  டெல்லி
    ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்  ஆப்கானிஸ்தான்
    தனுஷ்கோடியில் ராமர் சேது பாலம் தொடங்கும் இடத்தில் பிரதமர் மோடி வழிபாடு  ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025