அடுத்த செய்திக் கட்டுரை

இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம்
எழுதியவர்
Sindhuja SM
Mar 23, 2023
01:12 pm
செய்தி முன்னோட்டம்
அதானி குழுமம் பற்றிய மோசமான அறிக்கையை வெளியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இது குறித்த அறிவிப்பை ட்விட்டரில் குறிப்பிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் விமர்சித்திருந்தது.
மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், அதானி குழும பங்குகள் வெகுவாக கடந்த சில மாதங்களில் சரிவடைய தொடங்கியது.
ட்விட்டர் அஞ்சல்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023