
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை
செய்தி முன்னோட்டம்
பயங்கரவாதியும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பஞ்சாபிகள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபில் உள்ள ஒரு இந்து பூசாரியை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது உட்பட, குறைந்தது நான்கு தீவிரவாத வழக்குகளில் நிஜ்ஜாரை NIA தேடி வந்தது.
மேலும், நிஜ்ஜாரை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அறிவித்திருந்தது.
இந்நிலையில், அவர் கனடாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவு அமைப்பான காலிஸ்தான் புலிப் படையின்(KTF) தலைவர் நிஜ்ஜார், குர்பத்வந்த் சிங் பன்னூன் நடத்தும் 'நீதிக்கான சீக்கியர்கள்'(SFJ) பயங்கரவாத நிகழ்ச்சிக்கு உதவி வந்தார்.
ந்வதக்ஜண்வ
இந்திய தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த நிஜ்ஜார்
இந்த சீக்கிய பயங்கரவாத கூட்டங்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி போராடி வருகின்றன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம், இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களை நடத்தி வந்தார்.
2019 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தால்(MHA) தடைசெய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) என்ற குழுவின் தலைவர்களும் பயங்கரவாதிகளுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் மற்றும் பரம்ஜித் சிங் பம்மா ஆகியோருடன் நெருக்கமாக ஹர்தீப் நிஜ்ஜார் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த வாரம், காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரான அவதார் சிங் காந்தாவும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.