ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு
ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது. "தியாகி கமாண்டர் இஸ்மாயில் ஹனியே ரஹ்மல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பணியகத்தின் தலைவராக தளபதி யஹ்யா சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று அந்த இயக்கம் செய்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து சின்வார் காஸாவில் தலைமறைவாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ஹனியேவின் மறைவிற்கு பிறகு மிகவும் சக்திவாய்ந்த ஹமாஸ் தலைவராக இருக்கிறார்.
யாரை இந்த புதிய தலைவர்?
61 வயதான யாஹ்யா சின்வார், காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார் மற்றும் 2017 இல் காஸாவில் ஹமாஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இரக்கமற்ற வகையில் திட்டங்களை அமலாக்குபவர் மற்றும் இஸ்ரேலின் எதிரியாக இருந்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சின்வார் அல்-மஜ்த் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார். அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, இஸ்ரேலின் இரகசிய சேவையுடன் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களை தண்டித்து கொலை செய்வதில் ஈடுபட்டார். ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் குறிவைக்கப்பட்ட பின்னர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.