முழுமையான போருக்குத் தயாராகும் இஸ்ரேல்; லெபனான் பொதுமக்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களையொட்டி வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யுமாறு லெபனான் மக்களை இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடந்த சிறிய தாக்குதலுக்கு பிறகு லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி நீடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) இரு நாடுகளும் கடுமையான மோதலில் ஈடுபட்டன. பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி வெடிப்பைத் தொடர்ந்து வடக்கு இஸ்ரேலின் பரந்த மற்றும் ஆழமான பகுதியில் ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகளுக்கு மேல் அதற்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுடன் முழுமையான போரை அறிவித்த ஹிஸ்புல்லா
முன்னதாக, இரு தரப்பும் முழுமையான போரை நோக்கி நெருங்கி வரும் வேளையில், ஒரு ஹிஸ்புல்லா தலைவர் இஸ்ரேலுடன் ஒரு திறந்த போரை அறிவித்தார். பதிலுக்கு, இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது திங்கட்கிழமை அதிகாலை டஜன் கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இஸ்ரேலின் விமானப்படை லெபனானின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்குகிறது எனத் தெரிவித்தார். இரு தரப்பினரும் தாக்குதல் மற்றும் எதிர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஒரு உயர்மட்ட தளபதி மற்றும் 12 உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.