காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள்
காசாவில் உள்ள ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், அங்கு இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றதாக, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா நிவாரண நிறுவனம் (UNRWA) கூறுகிறது. "மூன்று வார போர் மற்றும் முற்றுகைக்குப் பின், காசா பகுதியில் பொது ஒழுங்கு சீர்கேடுவது கவலை தருவதாக உள்ளது" என ஐநா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், எப்போது, எங்கே இச்சம்பவம் நடைபெற்றது என்ற தகவல்களை குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், காசாவில் உள்ள பல ஐநா கிடங்குகளுக்குள், பாலஸ்தீன் மக்கள் புகுந்து கோதுமை, மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.