
2030-க்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க இருக்கும் பிரான்ஸ்
செய்தி முன்னோட்டம்
2030ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் தனது பல்கலைக்கழகங்களுக்கு வரவேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
75வது குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியாவுக்கு வந்திருக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் "முக்கிய கூட்டாளியாகிய" இந்தியாவுடனான பிரான்சின் உறவை வலுப்படுத்துவதற்கு இந்த "லட்சிய" முயற்சியை தொடங்கியுள்ளதாகவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 2023 இல் பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணத்திற்குப் பிறகு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
ட்ஜ்கவ்க்
பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத மாணவர்களுக்கு பிரான்சில் வாய்ப்பு
இந்நிலையில், இன்று ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டிருக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "'அனைவருக்குமான பிரஞ்சு, சிறந்த எதிர்காலத்திற்கான பிரெஞ்ச்' என்ற முன்முயற்சியுடன் அரசுப் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியைக் கற்க புதிய வழிகளை நாங்கள் தொடங்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
"நாங்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான புதிய மையங்களுடன், அலையன்ஸ் ஃப்ரான்சைஸ்களின் வலையமைப்பை உருவாக்கி வருகிறோம். அதில் சர்வதேச வகுப்புகளை உருவாக்க உள்ளோம். இது பிரெஞ்சு மொழி பேசத் தெரியாத மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரான்சில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கு விசா செயல்முறை நெறிப்படுத்தப்படும் என்றும், அவர்கள் திரும்பி வருவதை எளிதாக்கும் என்றும் பிரெஞ்சு அதிபர் எடுத்துரைத்தார்.