Loading...
ஃபிளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: ஓமன், அமீரகம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக் குறைபாடுகள் அம்பலம்
ஃபிளைதுபாய் FZ1073 விமானத்தின் கோ-பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி

ஃபிளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: ஓமன், அமீரகம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக் குறைபாடுகள் அம்பலம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
11:59 am

செய்தி முன்னோட்டம்

துபாயிலிருந்து டெல் அவீவ் நோக்கி சென்ற ஃபிளைதுபாய் FZ1073 விமானத்தின் கோ-பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி, தலைமை விமானியை தாக்கி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தீவிரமான பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என 'தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்' (WSJ) புலனாய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை

ஓமனின் ரகசிய எச்சரிக்கையும் அலட்சியமும்

29 வயதான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, தீவிரவாத சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டிருப்பதை ஓமன் நாட்டு அதிகாரிகள் முன்பே கண்டறிந்தனர்.

ஓமன் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்தபோதே அவரது இணையதள செயல்பாடுகளை ஆய்வு செய்த ஓமன் அரசு, அவரைப் பறக்கும் பணியிலிருந்து நீக்கி, தீவிரவாத மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி டெஸ்க் பணிக்கு மாற்றியது.

இருப்பினும், அல்-ஹம்மாமியின் இந்த ஆபத்தான பின்னணி குறித்த விவரங்களை ஓமன் அரசு மற்ற நாடுகளுக்கோ அல்லது சர்வதேச விமான நிறுவனங்களுக்கோ பகிர்ந்து கொள்ளவில்லை.

தணிக்கை

ஃபிளைதுபாய் நிறுவனத்தின் தணிக்கைக் கோளாறு

கடந்த பிப்ரவரி மாதம் அல்-ஹம்மாமியை வேலைக்கு அமர்த்திய ஃபிளைதுபாய் நிர்வாகம், அவரது முந்தைய பணி அனுபவம் குறித்து ஓமன் அரசிடம் எந்தவித பின்னணி தணிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குற்ற பின்னணி சான்றிதழை மட்டும் சரிபார்த்துவிட்டு, உணர்திறன் மிக்க துபாய் - தல் அவீவ் வழித்தடத்திலேயே அவரைப் பணியமர்த்தியுள்ளது.

தற்பொழுது இது தொடர்பாக ஃபிளைதுபாய் ஊழியர்களிடம் அமீரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இஸ்ரேல்

இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்புத் தவறு

இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத ஓமன் போன்ற நாடுகளின் பைலட்டுகள் அந்நாட்டு வான்வெளியில் பறக்கத் தடை உள்ளது.

ஃபிளைதுபாய் சமர்ப்பித்த பணியாளர்கள் மற்றும் பயணிகள் பட்டியலை ஆய்வு செய்ய இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சகம் தவறிவிட்டது.

வெளிநாட்டு விமானப் பணியாளர்களைத் தணிக்கை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனக் கூறி இஸ்ரேல் அமைச்சகம் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளது.

ADVERTISEMENT

போராட்டம்

ஆகாயத்தில் நடந்த கோரப் போராட்டம்

செப்டம்பர் 30 அன்று நடந்த இந்த சம்பவத்தின் போது, கோ-பைலட் அல்-ஹம்மாமி அவசரக்காலக் கோடரியால் தலைமை பைலட் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த போயிங் 737 MAX 8 விமானம், வெறும் 30 வினாடிகளில் 16,000 அடி உயரத்திற்குக் கீழே இறங்கியது.

காயமடைந்த நிலையிலும் கேபின் கதவைத் திறந்த பைலட் ஸ்மித் மச்சாரின் துணிச்சலால், பயணிகள் உள்ளே நுழைந்து கடத்தல்காரனை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் சவூதி அரேபியாவின் தபூக் விமானநிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

மச்சார் தற்போது துபாயில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT