Page Loader
விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை

எழுதியவர் Sindhuja SM
Apr 19, 2024
11:11 am

செய்தி முன்னோட்டம்

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை சில நாட்களுக்கு முன் நடத்தியது. இந்நிலையில், ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைகள் ஈரானில் உள்ள ஒரு தளத்தைத் தாக்கியுள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமான நிலையத்தில் வெடிச்சத்தம் கேட்டது. ஆனால் அதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான இஸ்பஹான் மாகாணத்தில் நடான்ஸ் உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் அமைந்துள்ளன. இஸ்பஹான் நகரில் உள்ள விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து, ஈரானிய வான்வெளியில் பறக்க இருந்த பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

ஈரான் 

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் இன்று ஈரான் நாட்டில் உள்ள இஸ்பஹான் மாகாணத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.