
சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஹீரோ விருது வென்ற ஐந்து இந்திய இளைஞர்கள்
செய்தி முன்னோட்டம்
'இன்டர்நேஷனல் யங் ஈகோ-ஹீரோ' (International Young Eco-Hero) விருதுகள் திட்டம், மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்த 8 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
உலகின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க முன்முயற்சிகளை மேற்கொண்ட இளம்வயது சுற்றுசூழல் ஆர்வலர்களை நாடு முழுவதிலிருந்து தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
'சர்வதேச இளம் சுற்றுச்சூழல் நாயகன்' விருதை உலகம் முழுவதிலுமிருந்து 17 டீன் ஏஜ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெற்றனர். அவர்களுள், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களும் அடங்குவர்.
card 2
ஆக்ஷன் ஃபார் நேச்சர் வழங்கும் விருதுகள்
அமெரிக்காவைச் சேர்ந்த "ஆக்ஷன் ஃபார் நேச்சர்" என்ற தன்னார்வலர் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இளம் சுற்றுச்சூழல் போராளிகளில், மீரட்டைச் சேர்ந்த எய்ஹா தீக்ஷித், பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா, நிர்வான் சோமானி மற்றும் மன்னத் கவுர் புது தில்லி மற்றும் கர்னவ் ரஸ்தோகி. மும்பை ஆகியோர் இந்தியாவிலிருந்து இந்த விருதை பெறுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, "ஆக்ஷன் ஃபார் நேச்சர்", 27 நாடுகள் மற்றும் 32 அமெரிக்க மாநிலங்களைச் சேர்ந்த 339 சுற்றுச்சூழல் ஹீரோக்களை அங்கீகரித்துள்ளது என்று இரு தினங்களுக்கு முன்னர், கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு போட்டியில் முதலிடம் பெற்ற தீட்சித், 4 வயதில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .