Page Loader
பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பணிநீக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எலான் மஸ்க்.. ஏன்?
பிற நிறுவனங்களையும் பணிநீக்கத்திற்கு ஊக்குவிக்கும் எலான் மஸ்க்

பிற தொழில்நுட்ப நிறுவனங்களையும் பணிநீக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எலான் மஸ்க்.. ஏன்?

எழுதியவர் Prasanna Venkatesh
May 26, 2023
01:35 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு, இந்த ஆண்டும் ட்விட்டர் உட்பட உலகளாவிய பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகளவில் பணிநீக்கத்தில் ஈடுபட்டு வருகின்ற. அமேசான், கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பலஆயிரம் ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்திருக்கின்றன. ட்விட்டர் நிறுவனமும் கடந்த ஆண்டில் இருந்து தொடர்ந்து பல்வேறு பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது தான். 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்பு அதன் செலவுகளை அதிரடியாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார் எலான் மஸ்க். அந்த நடவடிக்கையில் அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 7,500-ல் இருந்து 1,500 ஆகக் குறைந்தது.

எலான் மஸ்க்

பிற நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் எலான் மஸ்க்: 

தான் ட்விட்டர் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தது போலவே, சிலிக்கான வேலியில் இருக்கும் பிற நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது தன்னுடைய இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். "நிறுவனத்தின் உற்பத்தி திறன் பாதிக்காத வகையில் பிற நிறுவனங்களும் பணிநீக்கத்தில் ஈடுபடலாம். மதிப்புமிக்க ஊழியர்களை மட்டும் தங்கள் நிறுவனத்தில் வைத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்திருக்கிறார் அவர். அவருடைய தலைமையின் கீழ் சாதாணமாகவே 12 நேரம் வரை மிகவும் கடுமையான சூழலில் பணிபுரிவதாக ட்விட்டர் ஊழியர்கள் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.