Page Loader
கணவரை பிரிந்த பின்னர், சென்ட் பிசினஸில் இறங்கிய துபாய் இளவரசி...ப்ராண்ட் பெயர் தெரியுமா?

கணவரை பிரிந்த பின்னர், சென்ட் பிசினஸில் இறங்கிய துபாய் இளவரசி...ப்ராண்ட் பெயர் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2024
06:14 pm

செய்தி முன்னோட்டம்

துபாயின் ஆட்சியாளரின் மகள் ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், தனது மஹ்ரா எம்1 பிராண்டின் கீழ் 'Divorce' என்ற புதிய வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ப்ராண்ட் அவரது சமீபத்திய விவாகரத்துக்கான நேரடி குறிப்பு என்பது கூடுதல் சுவாரசியம். 30 வயதான இளவரசி, "Divorce" என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட கருப்பு பாட்டிலைக் கொண்ட வாசனை திரவியத்தின் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். உடைந்த கண்ணாடி மற்றும் ஒரு கறுப்புச் சிறுத்தையின் படங்களால் நிரப்பப்பட்ட வீடியோ, விவகாரத்தின் கருப்பொருளை மேலும் வலியுறுத்தியது.

சமூக ஊடக பதில்

'Divorce' சென்டிற்கு பொதுமக்கள் எதிர்வினை

Divorce வாசனை திரவியத்தின் தொடக்கமானது பொதுமக்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பயனர் ஷேக்கா மஹ்ராவின் அணுகுமுறையைப் பாராட்டி,"அதற்கேற்ப மஹ்ரா எப்படி நகர்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா? " என்று குறிப்பிட்டார். இஸ்லாமிய நடைமுறையான முத்தலாக் முறையைப் பயன்படுத்தி ஷேக்கா மஹ்ரா தனது கணவரை இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக விவாகரத்து செய்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த சென்ட் தொடங்கப்பட்டது. விவாகரத்து பற்றி சமூக ஊடகங்களில் அறிவிக்கும் அவரது முடிவு, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஷேக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஆவார். UAE-ல் உள்ள பெண்கள் அதிகாரம் மற்றும் உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்காக அவர் வாதிட்டதற்காக அறியப்படுகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post