சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை
செய்தி முன்னோட்டம்
சோமாலியா கடற்கரை அருகே நேற்று மாலை 'எம்வி லிலா நார்ஃபோல்க்' என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர்.
கடத்தப்பட்ட கப்பலை கண்காணிக்க சோமாலிய கடற்கரையை நோக்கி, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் விரைந்துள்ளது.
கப்பல் கடத்தப்பட்டதாக நேற்று மாலை இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கடத்தப்பட்ட கப்பலின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை விமானங்கள் பணியமடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2nd card
கப்பலில் 5-6 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இருக்கலாம்
கடத்தப்பட்ட கப்பலில் 5-6 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், கடத்தப்பட்ட கப்பல் UKMTO (யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்) இணைய முகப்பிற்கு(Portal) தகவல் அனுப்பியதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடத்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் கப்பல் யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள், தற்போது வரை வெளியிடப்படவில்லை.
மால்டிஸ்-கொடி கட்டிய வணிக கப்பல் அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், மற்றும் ஒரு கப்பல் சோமாலியாவில் கடத்தப்பட்டுள்ளது.
கப்பலில் கடற்கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த ஒரு பல்கேரிய நாட்டவரை இந்திய கடற்படை மீட்ட நிலையில், கப்பல் மாலுமியை ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல் மீட்டது.