10 வருட டூரிஸ்ட் விசாக்களை நிறுத்திய கனடா; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்
முறையற்ற குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில், கனடா தனது டூரிஸ்ட் விசா கொள்கையை புதுப்பித்துள்ளது. அதில் 10 வருட பல நுழைவு விசாக்களை வழங்கும் முந்தைய விதிமுறையினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், குடிவரவு அதிகாரிகளுக்கு விசாக்களின் வகை மற்றும் கால அளவைத் தீர்மானிப்பதில் அதிக விருப்புரிமை உள்ளது. அதாவது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு நீண்ட கால நுழைவு உறுதி செய்யப்படாது. "அதிகபட்ச செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படும் பல நுழைவு விசாக்கள் நிலையான ஆவணமாக இனி கருதப்படாது என்பதைக் குறிக்க வழிகாட்டுதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒற்றை அல்லது பல நுழைவு விசாவை வழங்குவதிலும், செல்லுபடியாகும் காலத்தை நிர்ணயிப்பதிலும் அதிகாரிகள் தங்கள் தீர்ப்பைப் பயன்படுத்தலாம்," என்று குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அறிக்கை குறிப்பிட்டது.
கனடா விசா கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்
கனடாவின் திருத்தப்பட்ட விசாக் கொள்கையானது குறுகிய கால தங்கும் காலத்தையும், நாட்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட நுழைவையும் குறிக்கும். விசாக்கள் காலாவதியை நெருங்கிக்கொண்டிருக்கும் சுற்றுலாவாசிகள், இப்போது தங்களுடைய தங்குவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களின் விசாக்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் காலாவதியாகிவிடும் என்று கனடா எதிர்பார்க்கிறது. ட்ரூடோ அரசாங்கம் அதிக காலம் தங்கியிருப்பவர்களுக்கு நாடு கடத்தப்படுவதை செயல்படுத்த உள்ளது. இதன் விளைவாக, கனடாவில் ஒரு பயணி நீண்ட காலம் தங்கியிருப்பது, விசாவைப் புதுப்பிப்பதைக் குறிக்கும், இது செலவுகள் மற்றும் விசா செயலாக்க நேரங்களை அதிகரிக்கும்