ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 இந்தியர்களுக்கும் ஜாமீன்; ட்ரூடோ ராஜினாமா எதிரொலியா?
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய பிரஜைகளுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்திய குடிமக்கள் - கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் - முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதோடு வழக்கு விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது மேலும், அடுத்த விசாரணை பிப்ரவரி 11 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, கனடா பிரதமர் தனது பதவியை விலகுவதாக அறிவித்ததன் தொடற்சியாக வந்துள்ளது.
யார்?
யார் அந்த ஹர்தீப் நிஜ்ஜார்?
ஹர்தீப் நிஜ்ஜார், கனடா நாட்டில் வசித்த ஒரு முக்கிய காலிஸ்தான் சார்பு தலைவர்.
அவர் ஜூன் 2023 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றது.
இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா இன்றளவும் மறுத்து வருகிறது. அவை "ஆதாரமற்றவை" என்று கூறியது.
எனினும் மே 2024 இல் கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) மூலம் நான்கு இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் இந்தியா-கனடா ராஜதந்திர உறவுகள் மோசமடைந்தது.
தாக்கங்கள்
இந்த ஜாமீனால் கனடாவிற்கான தாக்கங்கள் என்ன?
குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையானது கனேடிய அரசாங்கத்திற்கு ஒரு சாத்தியமான பின்னடைவாகக் கருதப்படுகிறது குறிப்பாக இந்தியாவிற்கு எதிரான அதன் ஆரம்ப கடுமையான நிலைப்பாட்டிற்குப் பிறகு.
இந்த வழக்கில் தாமதம் மற்றும் கணிசமான ஆதாரங்கள் இல்லாதது இந்த விஷயத்தில் கனடாவின் நிலைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தான் இந்தியா-கனடா இராஜதந்திர உறவுகளை சீர்குலைத்தது.