ஒதுக்கீடுகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் பங்களாதேஷ், ஏன்?
செய்தி முன்னோட்டம்
30% வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்களின் போராட்டங்கள் கிட்டத்தட்ட வங்கதேசம் முழுவதும் பரவியுள்ளன.
பாதுகாப்புப் பணியாளர்கள் வளாகங்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தி வருகின்றனர் மற்றும் இது வரை ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் பல்கலைக்கழக வளாகங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
போராட்டங்களின் தீவிரத்தால், வங்கதேச அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனினும், இந்த போராட்டங்கள் ஒதுக்கீட்டைப் பற்றியது அல்ல என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
எந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக அரசியல் பற்று இல்லாத மாணவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்?
வரலாறு
பங்களாதேஷின் சுதந்திர போராட்டம் மற்றும் ஒதுக்கீடு
1971ஆம் ஆண்டு விடுதலை இயக்கம் என்பது பங்களாதேஷின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். மில்லியன் கணக்கான மக்கள் போரிட்டு வங்காளதேசத்தை பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து சுதந்திரம் பெற்று தந்தனர்.
1972இல், அப்போதைய பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் கீழ், வங்காளதேசம் ஒரு ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.
அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு 30% இடங்களை ஒதுக்கியது.
ஒதுக்கீட்டு முறை மற்றவர்களுக்கும் வேலைகளை ஒதுக்கியது, அதே நேரத்தில் 44% வேலைகள் தகுதி அடிப்படையிலானவை.
ஒதுக்கீடு
30% சுதந்திரப் போராளிகளின் ஒதுக்கீடு எதற்கு என போராட்டம்
வங்கதேசத்தில் வேலை வாய்ப்பில் 30% இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் மூன்றாம் தலைமுறையினருக்கு ஏன் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் மொத்த தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பை கோருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு, மாணவர்களின் பெரும் போராட்டத்திற்கு பின்னர், ஷேக் ஹசீனா அரசாங்கத்தால் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒதுக்கீடு உட்பட வேலைகளில் உள்ள அனைத்து இட ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.
வழக்கு
இடஒதுக்கீடு கேட்டு வழக்கு
அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்த பின்னர், 2021ஆம் ஆண்டில் ஒரு மனுதாரர், உயர் நீதிமன்றத்திற்குச் சென்று சிவில் சேவைகளில் 30% சுதந்திரப் போராட்ட வீரர்களின் இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வழக்கு தொடுத்தார்.
மூன்று வருடங்களாக இந்தப் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை 1 அன்று 30% இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
இதுவே சமீபத்திய போராட்டங்களைத் தூண்டியது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அட்டர்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனால் தற்சமயம் அங்கே இட ஒதுக்கீடு இல்லை. எனினும் போராட்டங்கள் தொடர்கின்றன.