
பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
செய்தி முன்னோட்டம்
பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தாய் மொழியில் பணத்தை எண்ணுதல் என்று பொருள்படும் நப் டாங் என்று பெயரிடப்பட்ட அமெரிக்க ஷார்ட்ஹேர் பூனை கடந்த மே 9 அன்று ஆதரவு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த நிலையில், ஒருவர் அதை மீட்டு உரிமையாளரைக் கண்டுபிடித்து ஒப்படைப்பதற்காக காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்த பூனை குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட அதிகாரி டா பரிந்தா பக்கீசுக், காவல்துறையினர் பூனையை அன்புடன் வரவேற்று உணவு மற்றும் பொம்மைகளை வழங்கியதாக விளக்கினார்.
இருப்பினும், நன்றியுணர்விற்குப் பதிலாக, பூனை காவலர்களை கடித்தும், பிராண்டியும் வைத்தது.
கைது
கைது மற்றும் விடுதலை
இதை நகைச்சுவையாக பேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட பக்கீசுக், அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறி அதன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததகாக் கூறினார்.
வழக்கு தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட, உடனடியாக இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
அந்த பதிவில், "பூனை தனது சிறந்த வாழ்க்கையை வாழ்கிறது, அதே நேரத்தில் காவல்துறையினர் உண்மையான பாதிக்கப்பட்டவர்கள்" என்று அதிகாரி கேலி செய்து குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, அந்த கொடூரமான பூனையை தத்தெடுக்க விரும்பி பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், நப் டாங்கை அதன் உரிமையாளருடன் மீண்டும் இணைப்பதே தங்கள் முன்னுரிமை என்று போலீசார் வலியுறுத்தினர்.
உரிமையாளர் மறுநாள் வந்த நிலையில், நகைச்சுவையாக அவரை எச்சரித்து பூனையை ஜாமீனில் விடுவதாகக் கூறி உரிமையாளரிடம் சேர்த்தார்.