NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா 

    மாணவர் விசாவுக்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகையை உயர்த்தியது ஆஸ்திரேலியா 

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2024
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவில் படிக்கத் திட்டமிடும் இந்திய மாணவர்களை பாதிக்கும் வகையில், சர்வதேச மாணவர்களுக்கான விசா தேவைகளில் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

    மாணவர் விசாவிற்குத் தகுதிபெற சர்வதேச மாணவர்கள் குறைந்தபட்சம் AUD29,710($19,576) சேமிப்புக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

    குறைந்தபட்ச சேமிப்பு தொகையின் வரம்பு உயர்த்தப்படுவது கடந்த ஏழு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்.

    முன்பு AUD24,505($16,146)ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, தற்போது AUD29,710($19,576) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, சரியாக $3,430 டாலர்கள், 2,86,439 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா 

    ஆண்டு குடியேற்றத்தை பாதியாக குறைக்கும் முயற்சி

    இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மாணவர் ஆட்சேர்ப்பில் நடைபெறும் மோசடிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பிரதம மந்திரி ஆண்டனி அல்பானீஸ் அரசாங்கம் மாணவர் விசாக்களின் செயல்முறையை கடினமாக்க பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

    IELTS தேர்வுகளின் குறைந்தபட்ச மதிப்பெண்களும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டன.

    கடந்த அக்டோபரில், AUD21,041ஆக இருந்த குறைந்தபட்ச சேமிப்பு தொகை, AUD24,505 ஆக உயர்த்தப்பட்டது.

    ஆண்டு குடியேற்றத்தை பாதியாக குறைக்கும் முயற்சியில் மாணவர் விசாக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    ஆஸ்திரேலியா

    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  இலங்கை
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட்  உலக கோப்பை
    Sports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள் உலக கோப்பை
    இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா? பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025