Page Loader
இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்
இந்தியாவுடனான தூதராக உறவுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தான்

இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான்

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுடன் தூதரக உறவுகளை இன்று முதல் நிறுத்திக் கொள்வதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான நீண்ட கால உறவு மற்றும் நட்பை உணர்ந்து, இந்த கடினமான முடிவை கவனமாக சிந்தித்து எடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. "ஆழ்ந்த சோகம், வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் புதுடெல்லியில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் தூதரகம் அதன் பணிகளை நிறுத்திக் கொள்கிறது" என ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான் தூதரகம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான காரணங்களாக இந்திய அரசின் ஆதரவு இல்லாமை, ஆப்கானிகளின் நலன்களை பூர்த்தி செய்வதில் எதிர்பார்ப்புகளை எட்ட முடியாமல் போனது, பணியாளர்கள் மற்றும் வளபற்றாக்குறையை தூதரகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தூதரகத்தை மூடுவது குறித்து ஆப்கான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை