வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம்
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
"இதுவரை 43 பேர் தீயில் இறந்துள்ளனர்" என்று பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தீக்காய மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் தெரிவித்தார்.
காயமடைந்த 40 பேர் நகரின் பிரதான தீக்காய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்தெரிவித்துள்ளார்.
டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை இரவு 9:50 மணிக்கு(1550 ஜிஎம்டி) தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்புத் துறை அதிகாரி முகமது ஷிஹாப் கூறியுள்ளார்.
வங்கதேசம்
75 பேரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மேலும் விரைவாக மேல் தளங்களுக்கு பரவியதால், அங்கு ஏராளமான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
அதன் பின், தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் 75 பேரை உயிருடன் மீட்டதாக தீயணைப்புத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்லி சாலை கட்டிடத்தில் இருந்த உணவகங்கள், பல ஆடையகங்கள் மற்றும் மொபைல் போன் கடைகள் சேதமடைந்தன.
வங்கதேசத்தில் பாதுகாப்பு விதிகளை பலர் மீறுவதால், அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயமாகும்.
ஜூலை 2021இல், உணவு பதப்படுத்தும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் உட்பட குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர்.