உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை
செய்தி முன்னோட்டம்
அதிக பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.
உலகளவில் இரண்டு பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும் 3.6 பில்லியன் மக்களுக்கு சுகாதார வசதி இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய நெருக்கடி அதிகரித்துள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புவி வெப்பமயமாதலால், ஏராளமான நீர் உள்ள பகுதிகள் மற்றும் நீரே இல்லாத பகுதிகளிலும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.
உலகம்
வருங்காலத்தில் 20-25% மக்களுக்கு மட்டுமே சுத்தமான நீர் கிடைக்கும்
நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு அரிய மாநாடு ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஐநா நீர் மன்றம் மற்றும் யுனெஸ்கோ இந்த அறிக்கையை வெளியிட்டது.
அறிக்கையின் முன்னுரையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "நிலையற்ற நீர் பயன்பாடு, மாசு மற்றும் கட்டுப்படுத்தப்படாத புவி வெப்பமடைதல் ஆகியவை மனிதகுலத்தின் உயிர்நாடியை இறுக்கி கொண்டிருக்கிறது. இதனால், உலகம் ஆபத்தான பாதையில் பயணிக்கிறது" என்று எழுதியுள்ளார்.
இது இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், உலக மக்களில் 20-25% பேருக்கு மட்டுமே சுத்தமான நீர் கிடைக்கும் என்ற நிலை கூட வரலாம் என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.