NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?
    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் சொகுசு வீடு

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 15, 2023
    10:05 am

    செய்தி முன்னோட்டம்

    துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள விலையுயர்ந்த சொகுசு வீடு ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

    இந்த சொகுசு வீட்டினை லக்ஸ்ஹேபிடட் சூத்பீ இன்டர்நேஷனல் ரியால்டி என்ற நிறுவனம் அதன் உரிமையாளர் சார்பில் விற்பனை செய்யவிருக்கிறது. அந்த நிறுவனமானது இந்த வீட்டிற்கு 750 மில்லியன் திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1,600 கோடி ரூபாய்) விலையை நிர்ணயித்திருக்கிறது.

    இதற்கு முன் 2022 ஆகஸ்டில் இதே சுற்றுப்புறத்தைச் சேர்ந்த வீடு ஒன்று 210 மில்லியன் திர்ஹாம்ஸூக்கு விற்பனை செய்யப்பட்டது.

    எனினும், அந்த வீடானது ஒரு சதுரஅடிக்கு 5,614 திர்ஹாம்ஸ் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது விற்பனைக்கு வந்திருக்கக்கூடிய இந்த வீட்டிற்கோ சதுரடிக்கு 12,500 திர்ஹாம்ஸ் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    துபாய்

    மார்பில் பேலஸ்: 

    இந்த வீட்டினை, 100 மில்லியன் திர்ஹாம்ஸ் மதிப்புடைய இத்தாலிய மார்பில் கற்களைக் கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள். எனவே, இதன் விற்பனையாளரால் 'மார்பில் பேலஸ்' என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது இந்த வீடு.

    இந்த வீட்டை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆனதாம். 2018-ல் தான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

    60,000 சதுரடிகள் பரப்பளவில், ஐந்து படுக்கையறைகள் கொண்ட இந்த வீட்டின் முதன்மை படுக்கையறையின் அளவு 4,000 சதுரடிகள்.

    15 கார்களை நிறுத்தி வைக்கும் அளவுடைய கார் கேரேஜ், 19 குளியலறைகள், வீட்டுற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் நீச்சள் குளங்கள், இரண்டு டோம்கள், 80,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பவளப் பாறை அக்வாரியம் ஆகியவை வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

    இந்த வீட்டின் மொத்தப் பரப்பளவு 70,000 சதுரடிகள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    உலகம்

    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025