Page Loader
காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா
காசாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜெனரேட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் நின்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா

எழுதியவர் Srinath r
Oct 22, 2023
05:43 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல், காசாவுக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்ட நிலையில், காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு எச்சரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக, பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "எங்களிடம் தற்போது 120 பச்சிளம் குழந்தைகள் இன்குபேட்டர்களில் உள்ளனர், அதில் 70 பச்சிளம் குழந்தைகள் இயந்திர காற்றோட்டத்துடன்(வென்டிலேட்டர்) உள்ளனர், இவர்களுக்குத்தான் நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்" என யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கிரிக்ஸ் தெரிவித்தார். காசாவில் 50,000 பெண்கள் கர்ப்பமாக இருப்பதாகவும், தினமும் கிட்டத்தட்ட 170 பெண்கள் பிரசவிப்பதாகவும் ஐநா மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

காசாவில் அபாயத்தில் உள்ள 120 குழந்தைகள்