இன்று நடைபெறவிருக்கும் இந்திய மஸ்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரான பிரிஜ் பூஷன் சரன் சிங் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட, எட்டு மாதங்களுக்கு மேல் அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இந்நிலையில், தாமதமாக்கப்பட்டு வந்த WFI அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் WFI அமைப்பின் தலைவர் பதவிக்கு, பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கும், காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷெரானும் போட்டியிடுகின்றனர். மல்யுத்த வீரர்களின் ஆதரவுடன் அனிதா ஷெரான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த சம்மேளனத்தின் பிற பதவிகளுக்கும் தேர்தல்:
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவி மட்டுமின்றி, மூத்த துணைத் தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், கணக்காளர், இரண்டு கூடுதல் செயலாளர்கள் மற்றும் ஐந்து நிர்வாகப் பதவிகளுக்கும் சேர்த்தே இன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது. நான்கு துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிடுவர்களில் ஒருவர், தற்போது மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட, முன்னாள் மல்யுத்த வீரரான மோகன் யாதவ். 12 ஆண்டுகளாகப் போட்டியின்றி WFI அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வந்த பிரிஜ் பூஷனுக்கு அடுத்தபபடியாக புதிய தலைவரை இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவிருக்கின்றனர். பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங், தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.