பாரிஸ் விளையாட்டு கிராமத்தை விட்டு தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்; வைரலாகும் புகைப்படங்கள்
செய்தி முன்னோட்டம்
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தததை ஒட்டி, திங்களன்று வினேஷ் போகட் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார்.
அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகட் 100 கிராம் கூடுதல் எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனக்கு நீதி வேண்டும் என அவர் CAS நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியாகும் முன்னரே வினேஷ் பாரிஸிலிருந்து புறப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Clicks | ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து புறப்பட்ட வினேஷ் போகத்!#SunNews | #VineshPhogat | #Paris2024 | @Phogat_Vinesh pic.twitter.com/LiCScgYCKi
— Sun News (@sunnewstamil) August 13, 2024
வருகை
தாயகம் திரும்பும் வீர மங்கை வினேஷ் போகட்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முடிந்ததும், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத்துடன் இந்தியாவுக்குப் பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானம் இன்று, செவ்வாய்கிழமை காலை 10:30 மணிக்கு புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செஹ்ராவத்துடன் வினேஷ் போகத் இன்று இரவு இந்தியாவுக்குப் பயணம் செய்கிறார், காலை 10:30 மணிக்கு டெல்லியை சென்றடைவார்" என்று ஆதாரங்கள் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்தன.
இருப்பினும், வினேஷின் கணவர் சோம்வீர் ரதி என்டிடிவியிடம் பேசினார்: அவர் திரும்பும் தேதி குறித்து எந்த உறுதியும் இல்லை என்று கூறினார்.