மகளிர் ஐபிஎல் 2023 : முதல் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்
முதல் மகளிர் ஐபிஎல் சீஸனின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவர் வரை போராடி கோப்பையை வென்றது. ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக பல உயரங்களை எட்டியநிலையில், தற்போது மகளிர் ஐபில்எல்லிலும் புதிய உயரத்தை எட்டியுள்ளார். இதற்கிடையில், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஹர்மன்பிரீத் தனது முதல் டி20 லீக் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் தொடரின் தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிப் போட்டி ஹைலைட்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மெக் லானிங் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுக்க, டெல்லி கேப்பிடல்ஸ் பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 38 எடுத்து தடுமாறியது. 16 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிகா பாண்டே யாதவ் தலா 27 ரன்கள் எடுத்ததால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் பவர்பிளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் (60*) அரைசதம் அடித்ததன் மூலம் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.