உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு
இந்தியாவில் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் தொடங்கியது. அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் முதல் பயிற்சி போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. போட்டியின் நடுவர்களாக சையத் கலீத் மற்றும் வினோத் சேகன் பணியாற்றுகின்றனர். மூன்றாவது நடுவராக சாய்தர்ஷன்குமார் செயல்படுகிறார். இது பயிற்சி போட்டி என்பதால் ஒரு அணி தன்னிடம் உள்ள 15 வீரர்களையும் போட்டியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.