
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: இன்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை?
செய்தி முன்னோட்டம்
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரானது கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட விளையாடி வருகின்றனர்.
முதல் மூன்று குழுக்களுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து, A பிரிவைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்து மற்றும் நார்வே, B பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நைஜீரியா மற்றும் C பிரிவைச் சேர்ந்த ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் 16 அணிகள் கொண்ட நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இன்று D மற்றும் E பிரிவைச் சேர்ந்த எட்டு அணிகளுக்கான நான்கு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவில் 4 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்.
கால்பந்து
D மற்றும் E பிரிவுக்கான போட்டிக்கள்:
E பிரிவைச் சேர்ந்த வியட்நாம்/நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல்/அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று நண்பகல் 12.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.
இந்தப் போட்டிகளின் முடிவைப் பொருத்து அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகியவற்றில் இரண்டு அணிகளுக்கு நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரிவில் அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் சற்று வலுவான இடத்தில் இருக்கின்றன.
D பிரிவைச் சேர்ந்த இங்கிலாந்து/சீனா மற்றும் டென்மார்க்/ஹையாட்டி அணிகளுக்கு இடையே இன்று மாலை 4.30 மணிக்குப் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.
இந்தப் போட்டிகளின் முடிவைப் பொருத்து இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சீனா ஆகியற்றில் இரண்டு அணிகளுக்கு நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரிவில் இங்கிலாந்து சற்று வலுவான இடத்தில் இருக்கிறது.