மகளிர் ஐபிஎல் 2024 : 60 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்ட அணிகள்; முழுமையான பட்டியல் வெளியீடு
மகளிர் ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக அணியிலிருந்து 29 வீரங்கனைகள் விடுவிக்கப்பட்ட அதே வேளையில், 21 வெளிநாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் உட்பட மொத்தம் 60 பேரை அணிகள் தக்கவைத்துள்ளன. 2023 மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், 3 பேரை மட்டுமே விடுத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் விடுவித்துள்ள மூவரில் தாரா நோரிஸ், ஜாசியா அக்தர் மற்றும் அபர்ணா மோண்டல் ஆகியோர் அடங்குவர். டெல்லி கேப்பிடல்ஸ் தக்கவைத்த வீராங்கனைகள் : ஆலிஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், லாரா ஹாரிஸ், மரிசான் கேப், மெக் லானிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா சத்ஹு.
அதிக வீராங்கனைகளை விடுவித்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி
கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த குஜராத் ஜெயன்ட்ஸ், நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட, மற்ற எந்த அணிகளையும் விட அதிகமாக 11 பேரை விடுத்துள்ளது. தக்கவைத்த வீராங்கனைகள் : ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட், ஷப்னம் ஷகில், சினே ராணா, தனுஜா கன்வர். விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் : அனாபெல் சதர்லேண்ட், அஷ்வனி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்சி ஜோஷி, மோனிகா பட்டேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேகனா, சோபியா டன்க்லி, சுஷ்மா வர்மா.
நான்கு வீராங்கனைகளை மட்டும் விடுவித்த மும்பை இந்தியன்ஸ்
2023 மகளிர் ஐபிஎல் முதல் சீசனில் பட்டம் வென்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நான்கு வீராங்கனைகளை விடுவித்தது. எனினும் 2023 ஐபிஎல்லில் மும்பை அணியிடம் 17 வீராங்கனைகள் மட்டுமே இருந்ததால், அவர்களிடம் தற்போது ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. தக்கவைத்த வீராங்கனைகள் : அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், க்ளோ ட்ரையோன், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேலி மேத்யூஸ், ஹுமைரா காசி, இஸ்ஸி வோங், ஜின்டிமணி கலிதா, நாட் சிவர்-பிரண்ட், பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா. வெளியேற்றப்பட்டவர்கள் : தாரா குஜ்ஜர், ஹீதர் கிரஹாம், நீலம் பிஷ்ட், சோனம் யாதவ்.
முக்கிய வீராங்கனைகளை வெளியே அனுப்பிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மேகன் ஷட், டேன் வான் நீகெர்க் மற்றும் எரின் பர்ன்ஸ் ஆகிய முக்கிய வீராங்கனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலிருந்து விடுத்துள்ளது. இதற்கு காரணம் கடந்த சீசனில் இந்த வீராங்கனைகளின் மோசமான செயல்திறனதான் எனக் கூறப்படுகிறது. தக்கவைத்த வீராங்கனைகள் : ஆஷா ஷோபனா, திஷா கசட், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டெவின். வெளியேற்றப்பட்டவர்கள் : டேன் வான் நீகெர்க், எரின் பர்ன்ஸ், கோமல் சன்சாத், மேகன் ஷட், பூனம் கெம்னார், ப்ரீத்தி போஸ், சஹானா பவார்.
முக்கிய வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்ட உபி வாரியர்ஸ்
உபி வாரியர்ஸும் டெல்லி கேப்பிடல்சை போலவே முக்கியமான வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டு குறைந்தபேரை மட்டுமே விடுத்துள்ளது. விடுவித்துள்ளவர்களில் கடந்த சீசனில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய ஷப்னிம் இஸ்மாயில் மட்டுமே வெளிநாட்டு வீராங்கனை ஆவார். தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் : அலிசா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், கிரண் நவ்கிரே, லாரன் பெல், லக்ஷ்மி யாதவ், பார்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கயக்வாட், எஸ் யஷஸ்ரீ, ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன், தஹ்லியா மெக்ராத். விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் : தேவிகா வைத்யா, ஷப்னிம் இஸ்மாயில், ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக்.