WTC Final 2023 : ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல்! கையில் கறுப்பு பட்டையுடன் விளையாடும் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்!
செய்தி முன்னோட்டம்
2023 ஆம் ஆண்டு ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன் பிறகு இரண்டு அணி வீரர்களும் இரு நாடுகளின் தேசிய கீதங்களுக்காக வரிசையாக நின்றபோது தங்கள் ஸ்லீவ்ஸில் பட்டையை அணிந்திருந்தனர்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பட்டைகளை அணிந்துள்ளனர்.
வீரர்கள் மட்டுமல்லாது போட்டியின் கள நடுவர்களை கறுப்பு பட்டை அணிந்து உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தினர்.
ashwin omitted in india playing 11
அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு அணியில் வாய்ப்பு வழங்காத ரோஹித் ஷர்மா
இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், ரோஹித் ஷர்மா அறிவித்த இந்திய அணியின் பிளேயிங் 11'இல் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம் பெறவில்லை.
இதுகுறித்து டாஸின் போது பேசிய ரோஹித் ஷர்மா, "அஸ்வின் தலை சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அஸ்வின் அணியில் இருப்பது இந்தியாவின் வெற்றிக்கு கூடுதல் வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும்.
ஆனால் மைதானத்தின் நிலைக்கு ஏற்ப பிளேயிங் 11'ஐ தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தியா ரவீந்திர ஜடேஜாவை மட்டும் சுழற்பந்துவீச்சில் கொண்டு களமிறங்க உள்ளது.