
'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், தாங்கள் பிளேஆப் செல்லும் தகுதியற்றவர்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலா ஏழு வெற்றிகள் மற்றும் ஏழு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தையே பிடித்தது.
கடைசி லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் அணி அதில் வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்கு செல்லலாம் என இருந்த சூழலில், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால் பிளேஆப் வாய்ப்பை இழந்தது.
faf du plessis about playoff
ராயல் சேலஞ்சர்ஸின் செயல்திறன் குறித்து பேசிய கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய டு பிளெஸ்ஸிஸ் "கடைசி ஆட்டத்தில் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததால் இது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
எனினும் இந்த ஆண்டு மேக்ஸி வடிவத்தில் எங்களுக்கு சில நேர்மறையான அம்சங்கள் இருந்தன. விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது.
முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாத சில பகுதிகளும் இருந்தன.
எனினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால், நாங்கள் பிளேஆப்பில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' எனும் தொனியில் டு பிளெஸ்ஸிஸ் பேசியது ரசிகர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.