
இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்காக இந்தியா வந்துள்ள நிலையில், இந்தியாவின் விருந்தோம்பலால் திளைத்துள்ளது.
இந்திய அரசு கடைசி நேரம் வரை பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்க தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு இருந்தாலும், ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) நடந்த பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியா வந்து சேர்ந்தது.
வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் அந்த அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த ஆட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணிக்கு ஆடம்பரமான இரவு உணவு வழங்கப்பட்டது.
அப்போது பல ரசிகர்களுடன் வீரர்கள் செல்ஃபிக்களையும் எடுத்துக் கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியா வழங்கிய சிறப்பான விருந்தோம்பல் தொடர்பான காணொளியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியாவில் விருந்து
🎥 Hangout in Hyderabad: Glimpses from the Pakistan team dinner 🍽️#CWC23 pic.twitter.com/R2mB9rQurN
— Pakistan Cricket (@TheRealPCB) September 30, 2023