LOADING...
"நாங்களும் ஆடுவோம்ல நாட்டு நாட்டுக்கு" : சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கின் வைரல் வீடியோ
நாட்டு நாட்டு பாடலுக்கு ஜோடியாக டான்ஸ் ஆடிய சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்

"நாங்களும் ஆடுவோம்ல நாட்டு நாட்டுக்கு" : சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங்கின் வைரல் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Mar 16, 2023
07:13 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடலுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் நடனமாடியுள்ள காணொளி வைரலாகி வருகிறது. சமீபத்தில் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்று, ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் வரலாறு படைத்தது. அதன் பிறகு பலரும் இந்த பாடலின் ஸ்டெப்பை போட்டு காணொளி வெளியிட்டு வரும் நிலையில், இப்போது நாட்டு நாட்டு காய்ச்சல் கிரிக்கெட் வட்டாரத்திலும் பரவியுள்ளது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணியின் சார்பில் பங்கேற்றுள்ள ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா நடனமாடியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

லெஜண்ட்ஸ் லீக் ட்வீட்