
"சோதிக்காதீங்கடா என்னைய" : கடுப்பில் வாசிம் அக்ரம்! வைரலாகும் வீடியோ!
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இடம் பெற்றுள்ள கராச்சி கிங்ஸ் அணியின் தலைவர் வாசிம் அக்ரம் தனது அணி கடைசி ஓவரில் தோல்வியைத் தழுவிய நிலையில் நடந்து கொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு சீஸனின் புதன்கிழமை (பிப்ரவரி 22) அன்று கராச்சி கிங்ஸ் அணி நான்காவது தோல்வியை பெற்றுள்ளது. மேலும் கடைசி ஓவர் வரை சென்று தோல்வியைத் தழுவுவது இது மூன்றாவது போட்டியாகும்.
முல்தான் சுல்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கராச்சியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் விரக்தியடைந்த அக்ரம் தனது முன்னாள் இருந்த இருக்கையை எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளித்தெளித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வாசிம் அக்ரம் வைரல் வீடியோ
Wasim akram very angry #Rizwan #MultanSultans #wasimakram pic.twitter.com/TbNOEk7ysC
— farmanullah sahil (@f_sahil03) February 22, 2023