கிரிக்கெட் ரன் மெஷின் விராட் கோலி பள்ளியில் எடுத்த மதிப்பெண் எவ்ளோன்னு தெரியுமா?
விராட் கோலி தனது பள்ளி நாட்களில் ஒரு மாணவனாக என்ன மதிப்பெண்கள் எடுத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரன்-மெஷினாக மாறுவதற்கு முன்பு, கோலி கல்வியில் சுமாரான மாணவராகவே இருந்துள்ளார். அவரது முந்தைய உரையாடல்களில் ஒன்றில், பாடத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்காக கிரிக்கெட்டில் கடினமாக உழைத்ததில்லை என்று கோலியே ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) வரவிருக்கும் 2023 சீசனுக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் கோலி பள்ளி மதிப்பெண் பட்டியலை பகிர்ந்துள்ள நிலையில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளியில் கோலி எடுத்த மதிப்பெண்கள் என்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் புகைப்படத்தை கூ எனும் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார். அவர் தனது பதிவில், "உங்கள் மார்க்ஷீட்டில் குறைந்தபட்சம் சேர்க்கும் விஷயங்கள், உங்கள் குணாதிசயத்தில் எவ்வாறு சேர்க்கின்றன என்பது வேடிக்கையானது." என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, 2022 முதல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஃபார்மை மீட்டெடுத்தார். இந்நிலையில், கடந்த 2023இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஃபார்மை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.