NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி
    ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த விராட் கோலி

    ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 23, 2025
    08:12 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

    இது 2008 ஆம் ஆண்டு நடந்த தொடக்க ஐபிஎல் போட்டியுடன் ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது.

    முன்னதாக, இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர், தனது உள்ளூர் மைதானமான ஈடன் கார்டனில் போட்டி நடந்ததால், முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் வலுவாகத் தொடங்கியது.

    ஆனால் அஜிங்க்யா ரஹானே (56 ரன்கள்கள்) மற்றும் சுனில் நரைன் (44 ரன்கள்) ஆகியோரின் விக்கெட் இழப்பிற்குப் பிறகு வேகத்தை இழந்தது. இறுதியில் ஆர்சிபி அணிக்கு 174 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

    ஆர்சிபி

    ஆர்சிபி வெற்றி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கேகேஆர் அணியை கட்டுப்படுத்தினர்.

    இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது.

    பில் சால்ட் (50 ரன்கள்) மற்றும் விராட் கோலி (53* ரன்கள்) என கேகேஆரின் தவறான பந்துவீச்சு உத்தியைப் பயன்படுத்தி, பவர்பிளேயில் 80 ரன்கள் குவித்தனர்.

    கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த விராட் கோலி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி ஆர்சிபி அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

    முன்னதாக, இதில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய சில ஓவர்களிலேயே ஆர்சிபி வெற்றி பெறுவது உறுதியாகி, போட்டி ஒருதலைப்பட்சமாக செல்ல ஆரம்பித்துவிட்டது.

    2008

    ஐபிஎல் 2008 தொடக்க ஆட்டம்

    குறிப்பிடத்தக்க வகையில், இது ஐபிஎல் 2008 தொடக்க போட்டியைப் போலவே அமைந்துள்ளது. அதிலும் கேகேஆர் vs ஆர்சிபி மோதிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 222 ரன்கள் குவித்தது.

    அடுத்து பேட்டிங் செய்த ஆர்சிபி முதல் சில ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி தோல்வியடைவது உறுதியாகி போட்டி ஒருதலைப்பட்சமாக முடிந்தது.

    அந்த போட்டி ஆர்சிபியின் உள்ளூர் மைதானமான பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த நிலையில், உள்ளூரில் பெற்ற தோல்விக்கு தற்போது 17 வருடங்கள் கழித்து கேகேஆரை அதன் உள்ளூரில் பழி தீர்த்துள்ளது.

    2008 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் விளையாடிய விராட் கோலி, தற்போது வெற்றிக்கு முக்கிய பங்களித்து அவரே தோல்விக்கு பழி தீர்த்தது போல் இந்த போட்டி அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2025
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    விராட் கோலி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    18ஆம் எண்ணுடன் தொடரும் பிரபஞ்ச பிணைப்பு! மே 18இல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி! விராட் கோலி
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2023 : வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்! ஐபிஎல்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன்களின் முழுமையான பட்டியல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் இணைகிறார் சாய்ராஜ் பஹுதுலே ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை ஐபிஎல்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    KKR vs RCB : டாஸ் வென்றது ஆர்சிபி! கேகேஆர் முதலில் பேட்டிங்! ஐபிஎல்
    'இவ்ளோ கோபம் கூடாது' : ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய ஜேசன் ராய்க்கு 10 சதவீதம் அபராதம் விதிப்பு ஐபிஎல்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! குஜராத் டைட்டன்ஸ்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லிட்டன் தாஸிற்கு பதிலாக ஜான்சன் சார்லஸ் சேர்ப்பு கிரிக்கெட்

    விராட் கோலி

    ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம் ஷுப்மன் கில்
    விராட் கோலியுடனான பந்தம் குறித்து நெகிழ்ந்து பேசிய எம்எஸ் தோனி எம்எஸ் தோனி
    எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி; மூவரின் சிறப்பம்சங்களை ஒப்பிட்ட அஸ்வின் எம்எஸ் தோனி
    சென்னையில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025