Page Loader
பவுண்டரி லைன் நோக்கி ஓடிய சிராஜ்; குலுங்கி குலுங்கி சிரித்த கோலி; வைரல் வீடியோவின் பின்னணி
குலுங்கி குலுங்கி சிரித்த கோலி

பவுண்டரி லைன் நோக்கி ஓடிய சிராஜ்; குலுங்கி குலுங்கி சிரித்த கோலி; வைரல் வீடியோவின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 18, 2023
05:48 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக முகமது சிராஜின் பந்துவீச்சு இருந்தது. முன்னதாக, இந்த தொடரில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்த முகமது சிராஜ், இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். போட்டியின் நான்காவது ஓவரில் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய சிராஜின் மூன்றாவது பந்தை பேட்டர் பவுண்டரி லைன் நோக்கி அடிக்க, அவரும் பவுண்டரி எல்லை வரை விரட்டி ஓடினார். பீல்டர்கள் இருக்கும்போது பந்துவீசிய சிராஜே பவுண்டரி லைன் வரை ஓடியதை பார்த்த விராட் கோலியும், ஷுப்மான் கில்லும் ஸ்லிப்பில் நின்று குலுங்கி குலுங்கி சிரித்தனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

embed

வைரல் வீடியோ

Reality ! They are Laughing on Siraj As he only Bowl and he only Running to safe Boundary#INDvsSL https://t.co/3EvGgSu4Rp pic.twitter.com/qbdY3NcuTK— Jaisi Jiski Soch (@Jaisi_JiskiSoch) September 17, 2023