
அதிகமுறை டக்கவுட்; சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்த விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி 9 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் அடிக்காமல் டக்கவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 34வது முறையாக டக்கவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
Most duck outs in International Cricket
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக்கவுட் ஆன இந்திய வீரர்கள்
இந்தியாவுக்காக டாப் ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கி அதிகமுறை டக்கவுட் ஆன வீரர்கள் பட்டியலில் 34 முறையுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடங்கும் முன், 33 டக்கவுட்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 34வது முறையாக டக்கவுட் ஆகி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதற்கிடையே, வீரேந்திர சேவாக் 31 முறை டக்கவுட் ஆகி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும், தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 30 டக்கவுட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.